Saturday, March 31, 2012

ஜெனீவா பிரேரணை குறித்து நாடாளுமன்றில் விவாதம்

 
[ சனிக்கிழமை, 31 மார்ச் 2012, 02:43.18 AM GMT ]
ஜெனீவா பிரேரணை தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் 4ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
ஜெனீவா பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விவாதத்தின் போது அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட உள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டு விடுமுறையின் பின்னர் மே மாதம் 8ம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்படவிருந்தது. எனினும், கட்சித் தலைவர்களின் கோரிக்கைக்கு அமைய அடுத்த வாரம் விவாதம் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கோரியுள்ளார்.

இலங்கை, தியத்தலாவையில் நேற்று பனிக்கட்டி மழை பொழிவு!

 
[ 31-03-2012 05:25:03 ]

இலங்கையின் தியத்தலாவை நகரை அண்டிய பிராந்தியத்தில் நேற்று மாலை பனிக்கட்டி மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஈ.பி.டி.பி உறுப்பினரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் யாழ். இளைஞர்கள் நால்வர் கைது

 
[ Saturday, 31-03-2012, 07:11:04 ]

திருகோணமாலையில் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இலங்கையில் சிகரெட், மதுபான வகைகள் மற்றும் வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு!

 

 
[ Saturday, 31-03-2012, 07:55:23 ]
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் கார், முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுபானம் மற்றும் சிகரெட்களின் விலைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

tamilfast