Sunday, June 3, 2012

மட்டு.தாந்தாமலை கந்தவேள் முருகன் ஆலயத்தினுள் இராணுவ உடையணிந்தோர் அட்டகாசம்

மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தை அண்டிய, முத்தையா சுவாமிகள் வசித்த கந்தவேள் எனும் முருகன் ஆலயத்தினுள் நேற்று முன்தினம் பிரவேசித்த இராணுவ உடையணிந்தோர் அங்கிருந்த கருங்கற்களினாலான தூண்கள், சிறிய கட்டடம் மற்றும் வழிபாட்டு பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அங்கு நேரில் சென்று பார்வையிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இச்சம்பவம் தொடர்பாக குறிப்பிடுகையில்,
தாந்தாமலை முருகன் ஆலயமும் அதனை அண்டிய பிரதேசங்களும் இந்துக்களின் பூர்வீக வழிபாட்டுக்குரிய புனித பிரதேசமாகும்.
இந்தப் பிரதேசங்களில் அண்மைக் காலமாக பெரும்பாண்மை இனத்தவர்களும் இராணுவத்தினரும் இந்துக்களின் வழிபாட்டு தலங்களை அழித்துவிட்டு, பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த சில மாதங்களுக்கு முன் கச்சைக்கொடி சுவாமிமலை எனும் இந்துக்களின் பூர்வீக பிரதேசத்தில் அங்குள்ள பௌத்த பிக்குகள் இராணுவம் மற்றும் பொலிசாரின் உதவியுடன் பௌத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகன்றனர்.
இவற்றையும் நான் நேரில் சென்று பார்வையிட்டு விகாரை அமைப்பதை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டிருந்தேன்.
எனவே இந்துக்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்களை பூண்டோடு அழித்துவிட்டு அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு இலங்கை அரசின் அணுசரணையுடன் பௌத்த பிக்குகள் செயற்படுகின்றனர்.
இதற்கு இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பளிக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றவாளி மகிந்தவை கைதுசெய்யக் கோரி பிரித்தானியாவில் வழக்கு!

பிரித்தானிய மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வரும் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, இனக்கொலைக்கு எதிரான தமிழர்கள் ((TAG) அமைப்பு பிரித்தானியாவின் லண்டன் மாநகரக் காவல்துறைச் சேவையிடம் ஒரு முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளது.
அத்துடன், மகிந்தவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று லண்டன் மாநகரக் காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்த முறைப்பாட்டு மனுவில், போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக் குற்றங்களை மகிந்த ராஜபக்ச இழைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்துடன், உலகளாவிய அதிகார விதிகளுக்கு உட்பட்ட பிரித்தானியாவின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு ராஜபக்சவை கைதுசெய்து, இந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு அந்த அமைப்பு மாநகரக் காவல்பிரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதில் விதிவிலக்குச் சிக்கல்கள் இருந்தாலும், மாநகரக் காவல்துறையினர் வழக்குப் பதிவொன்று செய்து விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்வதை தடுக்கவியலாது என இனக்கொலைக்கு எதிரிரான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த முறைப்பாட்டு மனுவுடன் ராஜபக்சவுக்கு எதிராக சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட வழக்குத்தாக்கல் நகலொன்றையும் இணைத்து, அதில் 2005 ஆம் ஆண்டு திருகோணமலையில் சிறீலங்கா பாதுகாப்புப் படைகளால் கொலைசெய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தையான கலாநிதி காசிப்பிள்ளை மனோகரனின் வழக்கு விடயமும் முதன்மைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளதுடன், அவர் ஒரு பிரித்தானியக் குடியுரிமை பெற்றவர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த முறைப்பாட்டில் ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையின் பிரிவுகளும் மேற்ககோள்காட்டப்பட்டுள்ளது.
'பொதுமக்களுள் கணிசமான பகுதி அழிவை ஏற்படுத்தக்கூடியவாறு கணக்கிட்டு " உணவு மற்றும் மருந்து அவர்களை அணுகவிடாது வேண்டுமென்றே தடுத்ததோடு, பொதுமக்கள் மீது திட்டமிட்ட எறிகணை வீச்சுக்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது. " என்பதை அந்த அறிக்கை விவரிக்கிறது.
அது இனப்படுகொலையைத் தடுத்தலும் தண்டனை விதித்தலும் என்னும் ஐ.நா. உடன்படிக்கையின் சரத்து 2(சி) இல் கூறப்பட்டுள்ள இனப்படுகொலை வரையறையை ஒத்ததாக உள்ளது எனவும் அந்த முறைப்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வலிமையான நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஒருவர் கைதுசெய்யப்பட்டு கூண்டில் நிறுத்தப்படுவதற்கான ஒரு ஆரம்ப நிலையை சந்திக்கிறமை தெளிவாகவுள்ளது என்பதோடு, பிரித்தானியாவின் உலகளாவிய அதிகாரம் மற்றும் சர்வதேச சட்டதிட்டங்களின் பொருட்டு ராஜபக்சவை கைதுசெய்து, நீதியின் முன் நிறுத்துவதற்கு லண்டன் மாநகரக் காவல்துறை அவசிய படிமுறைகளை எடுக்கவேண்டுமென இனக்கொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளது.

Wednesday, May 23, 2012

சரத் பொன்சேகாவிற்கு 7 ஆண்டுகள் வரையில் தேர்தலில் போட்டியிட முடியாது!– சட்ட மா அதிபர்




ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஏழாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தர தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு நிபந்தனை அடிப்படையிலான பொது மன்னிப்பே வழங்கப்பட்டுள்ளது.
ஏழாண்டுகள் வரையில் தேர்தல்களில் போட்டியிட முடியாது. எனினும் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
சரத் பொன்சேகா சிறைத்தண்டனை அனுபவிக்கப்பட வேண்டிய காலத்திற்கே ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார். இதன்படி, அவர் சிறைத் தண்டனை அனுபவித்த நபர் ஒருவராகவே கருதப்பட வேண்டும்.
தப்பிச் சென்ற படைவீரர்களுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சரத் பொன்சேகாவிற்கு எதிராக தொடர்ந்தும் நீதிமன்றில் வழக்கொன்று விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தர தெரிவித்துள்ளார்

மகிந்தவுக்கு அழைப்பு விடுத்ததால், திணறும் பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள்



பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மூடிசூடி அறுபதாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவுக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்த, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் வெறுப்படைந்து போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு வரும் யூன் 4ம் நாள் மகிந்த ராஜபக்ச லண்டன் செல்லவுள்ளார்.
இதுபற்றிய தகவல்கள் வெளியானதும், அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் ராஜபக்சவுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர்.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்ததைக் கண்டித்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கண்டனக் கடிதங்கள் பல அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், கடந்த 2010ம் ஆண்டு ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்ற லண்டன் சென்ற மகிந்த ராஜபக்ச பாதுகாப்புக் காரணங்களால் உரையாற்றாமலே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டி இம்முறை அவருக்குப் பொருத்தமான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதனால் பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள், இந்தச் சர்ச்சையில் இருந்து எவ்வாறு விடுபடுவதென்று தெரியாமல் திணறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழக்கில் மீட்பு! முஸ்லீமாக மதமாற்றம்



யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் காணாமல் போகும் சிறார்களது நிலை தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாதிருந்து வரும் நிலையினில் அவ்வாறு காணாமல் போன சிறுவன் ஒருவன் கிழக்கு மாகாணத்தில் ஒரு வருடத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.
தமிழ் சிறுவனை கடத்தி முஸ்லீமாக மாற்றி கொடுமைப்படுத்திய முஸ்லீம்கள்! அதிர்ச்சியில் தமிழ் மக்கள்
யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று முஸ்லீமாக மாற்றி அவனை கொடுமைப்படுத்திய மிகவும் பரபரப்பான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியைச் சேர்ந்த பரமநாதன் ரஜிராம் வயது 12 என்ற மாணவனே இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டவராவார்.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியிலிருந்து கடந்த வருடம் யூன் மாதம் 8ம் திகதி இம்மாணவன் முஸ்லீம் ஒருவரால் ஆசை வார்த்தை கூறி துவிச்சக்கர வண்டியில் ஏற்றி செல்லப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அங்கிருந்த வான் ஒன்றில் ஏற்றப்பட்டு அவனை யாழ். ஐந்து சந்திப் பகுதிக்கு கொண்டு வந்து அன்றிரவு அவனை மட்டக்களப்பு காத்தான்குடிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.
அங்கு அவனுக்கு சுண்ணத்து பண்ணப்பட்டு தொடர்ந்து அன்வர் என பெயர் மாற்றப்பட்டு வீடொன்றில் தங்கவைக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்த மூன்று சிறுமியர்களை பாடசாலைக்கு கூட்டிச்செல்வது கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவது என வீட்டு வேலை செய்யுமாறு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளான்.
இதன் பின்னர் இச்சிறுவன் யாழ்ப்பாணத்திற்கு இவ்வருடம் கொண்டு வரப்பட்டு நடைபாதை கடையொன்றில் வியாபாரத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது கடந்த 17ம் திகதி இவரை இனங்கண்டு சண்டிலிப்பாயைச் சேர்ந்த ஒருவர் இது தொடர்பில் தாயாருக்கு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
பின்னர் தனது மகனை இனங்கண்ட தாயாரைக்கண்டு மகன் ஏன் மட்டக்களப்பிற்கு வந்தீர்கள் என கண்ணீர்; சிந்தி கதறி அழுதுள்ளார். ஏனெனில் தான் எங்கிருக்கின்றேன் என்பதே அவனுக்கு தெரியவில்லை.
இதன்போது உடனடியாகவே தாயார் சுதாகரித்துச் செயற்பட்டு ஏற்கனவே மானிப்பாய் பொலிஸில் முறையிட்டிருந்ததால் பொலிஸாரிடம் சென்று விடயத்தை தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த இரு வர்த்தகர்களையும் உடனடியாக கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது சிறுவனை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு தெரிவித்ததோடு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் சிறுவன் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஐந்து சந்தியிலிருந்த வீடொன்றிலிருந்து சிறுவன் கடைசியாக காணாமல் போன அன்று அணிந்திருந்த பாடசாலை சீருடை புத்தகப்பை என்பவற்றை பொலிஸார் மீட்டனர்.
இதேவேளை சிறுவன் இன்னமும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லையென்பதோடு சிறுவனை வேலைக்கு அமர்த்திய நடைபாதை வியாபாரிகள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் குறித்த சிறுவனை பொலிஸார் விலங்கிட்டு வைத்தியசாலைக்கு கொண்டு வந்ததை கண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் பொலிஸாரின் ஒரு பக்க சார்பான இச்செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இச்சிறுவன் காணாமல் போனது தொடர்பில் தாயார் ஏற்கனவே மனித உரிமைகள் ஆணைக்குழு சிறுவர் நன்னடத்தை பிரிவு என்பவற்றில் முறையிட்டிருந்ததால் அவர்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க பொலிஸாரை வற்புறுத்தி வருகின்றனர்.
முஸ்லீம்கள் மேற்கொண்ட இக்கடத்தல் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதோடு எரிச்சலையும் தோற்றுவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காரைநகரில் வலுக்குறைந்த இளம் பெண் ஒருவரையும் முஸ்லீம்கள் இருவர் கற்பழித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது

Sunday, May 6, 2012

ஆயுதப் போராட்டத்தில் தோற்கடித்தாலும் அரசியல் போராட்டத்தில் தமிழர்களை தோற்கடிக்க முடியாது - மாவை, மனோ

இன்று ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது
அது தமிழர்களைப் பொறுத்தவரை சாதகமானதொன்றாக அமையாவிடினும், அதில் கூறப்பட்டிருக்கின்ற தமிழர் பகுதியின் நில ஆக்கிரமிப்பு, இராணுவ வெளியேற்றம், மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்களை அரசாங்கம் நிறைவேற்றியே ஆகவேண்டும்.

“இந்து சமுத்திரத்தின் கொலைக்களம்'' கிலிபிடித்து அதிர்ந்து போயுள்ளது இலங்கை படைத்தரப்பும் அரசதரப்பும்!- கலாநிதி சூசை

இரத்தின துவீபம்', “இந்து சமுத்திரத்தின் முத்து' என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட இலங்கை, இன்று “இந்து சமுத்திரத்தின் கொலைக்களம்' என்ற கிரிமினல் பட்டத்துடன் சர்வதேச அரங்கில் தலைகுனிந்து நிற்கின்றது.
வரலாற்றில் கறைபடிந்த அழிக்க முடியாத அவமானம் இது. வன்னிப் பேரவலம் தொடர்பாக ஐ.நா. நிபுணர் வெளியிட்ட அறிக்கையும், சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இரு ஆவணங்களும் இதற்குத் தக்க சான்றுகள்.
நிபுணர் குழுவினர் சாதாரணமானவர்கள் அல்ல. ஆகவே அறிக்கையும் சாதாரணமானவையல்ல. சனல் 4 இல் வெளியான காணொளியானது தடயவியல் நிபுணர்கள், ஒளி ஒலி வல்லுனர்கள், வெடிபொருள்சார் நிபுணர்கள் ஆகியோன் துல்லியமான பரிசோதனையின் பின்னர் வெளிவந்தவை என இதனைத் தயாரித்த “கெலம் மெக்ரே' கூறுகின்றார்.
உலகத்தின் மனச்சாட்சியையே உலுக்கிய இவை யாவும் போலியானவை என மீண்டும் ஒரு பொய் கூறியுள்ளது இலங்கை அரசு. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் என்பார் இவைகள் அனைத்தும் போலியானவை எனக் கூறுகின்றார். பேராசிரியர் இவ்வாறு பொய் கூறுவது கல்வி உலகிற்கே பெரும் அவமானம்.
மேற்குறித்த அறிக்கையும் தொலைக்காட்சி ஆவணம் பொய் எனில், அறுபது ஆண்டுகளாக, இலங்கை அரசு இலங்கைத் தமிழ்த் தேசியத்திற்கு இழைத்து வந்துள்ள அத்தனை அநியாயங்களும் அட்டூழியங்களும் பொய்.
கிளாலிப் பயணிகள் படுகொலை, மண்டைதீவில் குருநகர் மீனவர் படுகொலை, குமுதினிப் படகு கோரக்கொலை, நவாலி தேவாலயப் படுகொலை, நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை, செஞ்சோலை சிறுவர் படுகொலை இப்படிப் பல படுகொலைகள் இவையாவும் பொய் “நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை' இலங்கை அறுபது வருடங்களாக சர்வதேச சமூகத்தின் முன் கூறிவருகின்ற பொய்மொழிகள் இவை.
கடவுளின் பத்துக்கட்டளைகளில் (Ten Commandments)  ஒன்று கொலை செய்யாதிருப்பாயாக, இன்னொன்று “பொய் சொல்லாதிருப்பாயாக' எனக் கூறுகிறது.
இலங்கை அரசு கொலைகளையும் செய்துவிட்டு சுத்தப் பொய்யும் கூறி கடவுளின் பத்துக் கட்டளைகளையும் மீறியுள்ளது.
தொடர்ச்சியாக செய்துவரும் படுகொலைகளும் பொய்களுக்கும் சேர்த்து இன்று இலங்கைக்கு கிடைத்துள்ள மகத்தான பட்டம் “இந்து சமுத்திரத்தின் கொலைக்களம்'.
இலட்சக்கணக்கான மக்களை வன்னியில் குறுகிய நிலப்பரப்பினுள் முடக்கி எவரையும் உள்ளே செல்ல அனுமதிக்காது தாம் விரும்பியவாறு தமது காட்டுத்தர்பார் நாடகத்தை நடத்தி முடித்துள்ளது இலங்கைப் படை. தமது வெறியாட்டம் எவருக்கும் தெரியவாய்ப்பில்லை என்றுதான் அப்போது எண்ணியிருந்தது.
சனல் 4 ஆவணப்படம் வெளிவரத் தொடங்கிய போதுதான் தொலை நுகர்வுத் தொழில்நுட்பம் தமது தலைக்கு மேலே சுழன்று கொண்டிருந்த இரகசியம் தெரியவந்துள்ளது.
இப்போது கிலிபிடித்து அதிர்ந்து போயுள்ளது இலங்கை படைத்தரப்பும் அரசதரப்பும்.
சனல் 4 ஆவணப்படத்தின் தொடர் இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் இனிப்போகப் போகத்தான் வெளிவரப் போகிறது.
மேற்கு ஐரோப்பாவில் ஹிட்லரின் யூதப்படுகொலை, கிழக்கு ஐரோப்பாவில் பொஸ்னிய முஸ்லிம்களின் படுகொலை, ஆபிரிக்காவில் றுவாண்டா குட்சி இனப்படுகொலை, மேற்கு ஆசியா ஈராக்கில் சதாமின் குர்டிஸ் இனப்படுகொலை. தென்கிழக்காசியாவில் பொல்பெட்டின் கம்பூச்சிய படுகொலை இந்த வரிசையில் இப்போது தென் ஆசியாவின் கொலைக்களத்தில் சிங்களத்தின் தமிழர் படுகொலை.
ஹிட்லர், பொல்பொட், சதாம் ஆகியோரின் இழிவுச்சாவுகளை இலங்கை ஆட்சியாளர்களும் நினைவிற் கொள்வது பொருத்தமானது.
முள்ளிவாய்க்காலில் கோரக்கொலை செய்யப்பட்டு புதைகுழியில் போடப்பட்டது தமிழ் தேசியம் மட்டுமல்ல, புத்தரின் அஹிம்சையும், இந்தியாவின் காந்தீயம், அசோக தர்மமாகும். தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் தப்பு செய்தவன் திருந்தி ஆகணும்.

வணிகர்களாக வந்த முஸ்லிம்கள் தமிழ், சிங்களப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தனர்: தம்புள்ளை தேரர்

தம்புள்ளை பள்ளிவாசல் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. அரசாங்கமும் இது தொடர்பில் இன்னும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்நிலையில் பள்ளிவாசல் விவகாரத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று தம்புள்ளை ரங்கிரி விஹாரையின் பிரதம பிக்கு இனாமலுவே சுமங்கல தேரர் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
இலங்கையில் பௌத்தம் 2 300 வருட வரலாற்றைக்கொண்டது. இஸ்லாமியர்கள், இலங்கைக்கு வணிகத்துக்காகவே வந்தனர். ஆண்கள் மாத்திரமே இங்கு வந்தனர். பின்னர் இங்குள்ள சிங்கள மற்றும் தமிழ்ப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டனர்.
இதுவே அவர்களின் வரலாறு எனவே அவர்கள் இங்கு வந்து தமது வரலாற்றை காட்டமுடியாது. தம்புள்ளை விஹாரை உலகத்தின் முக்கிய இடங்களில் ஒன்றாக பதிவு செய்யப்படடுள்ளது
இதனை முஸ்லிம்கள் (தம்பிகள்) குழப்பியடிக்க பார்க்கின்றனர்.
அதற்கு இடம்தரமுடியாது. உலகம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவிவருகிறது. ஆனால் பௌத்த அடிப்படைவாதம் எங்கும் இல்லை.
இலங்கையில் 14 மில்லியன் பௌத்தர்கள் உள்ளனர். முஸ்லிம்கள் எத்தனை பேர் உள்ளனர்.தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகளில் பௌத்தர்கள் அதிகமாக உள்ளனர். வத்திக்கானில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளமையால் அது கிறிஸ்தவ நாடு என்று கொள்ளப்படுகிறது.
மத்திய கிழக்கில் சில நாடுகள் முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ளமையால் அவை முஸ்லிம் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
எனவே இலங்கையில் வந்து பௌத்த கலாசாரத்துக்கு மத்தியில் தம்முடைய வரலாற்றை முஸ்லிம்கள் நிலைநாட்ட நினைப்பது கொள்ளையாகவே இருக்கும் என்று இனாமலுவே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், குறித்த பள்ளிவாசல் அகற்றப்படமாட்டாது என்று கூறுகிறார். ஆனால் இலங்கையில் இரண்டாவது பிரஜையாக உள்ள பிரதமர் டி எம் ஜயரட்ன, பள்ளிவாசலுக்கு வேறு இடம் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தேரரிடம் கேட்டபோதும், ஜனக பண்டார தென்னக்கோன் ஒரு பொலிஸ்காரராக இருந்தவர். எனவே அவர் தமது பாணியில் பேசுகிறார். அவர் நாடாளுமன்றத்துக்கு அவருடைய தந்தையின் வாக்குகளின் மூலமே தெரிவானார் எனவே அவரின் பேச்சை பௌத்தர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் தேரர் தெரிவித்துள்ளார்

Friday, May 4, 2012

இலங்கையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகள் பொதுமக்களால் அபகரிப்பு

காணி மீளமைப்பு ஆணைக்குழு, அரச காணிகளை சட்டவிரோதமாக பயன்படுத்துவோரை கண்டுபிடிக்கும் வகையில் அண்மையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
ஹரிகுபுதா ரொஹான்டிரா என்பவர் தலைமையிலான இந்தக் குழுவில் 6 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்தக்குழுவின் ஆரம்ப விசாரணைகளின்படி புத்தளத்தில் பொதுமக்களால் சுமார் 1600 ஏக்கர் அரச காணி அபகரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த காணிகளுக்கு போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான உரிமையும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களிடம் இருந்து காணிகோரல் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனையடுத்தே அரச காணிகள் தொடர்பான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கண்டியிலும் புத்தளத்திலும் சுமார் 3000 ஏக்கர் அரச காணிகளை பொதுமக்கள் கையடக்கப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து! பாடசாலை பிரதி அதிபர் ஸ்தலத்தில் பலி

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் பிரதி அதிபர் உயிரிழந்துள்ளடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் மட்டக்களப்பு வின்சட் மகளிர் தேசிய உயர்தர பாடசாலையின் பிரதி அதிபர் தங்கேஸ்வரி நாகரெட்னம் (55வயது)என்பவரேஉயிரிழந்துள்ளார்.
அத்துடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்சென்ற அவரது மகனான நரேந்திரகுமார் (22வயது) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
இவர்கள் இருவரும் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது மகன் நித்திரை தூக்கத்தில் மின்சாரத் தூணில் மோட்டார் சைக்கிளை மோதியுள்ளார்.
இதன்போது பிரதி அதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(யாழ்.நாகவிகாரையில் துப்பாக்கிச் சூடு - 2 சிறிலங்கா இராணுவத்தினர் பலி



யாழ்ப்பாண நகரில் இன்று காலை இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாகவிகாரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த படையினரே உயிரிழந்தவர்களாவர்

கிண்ணியாவில் நிலத்திலிருந்து புகை வெளியேற்றம்: எரிமலையின் சாயல்! மக்கள் பதற்ற

கிண்ணியா பிரதேசத்தில் எழிலரங்கு மைதானத்திற்கு அருகிலுள்ள வீட்டின் அருகில் உள்ள நிலத்திலிருந்து இன்று புகை வெளியாகியுள்ளது.
கிண்ணியா பிரதேசத்தில் எழிலரங்கு மைதானத்திற்கு அருகிலுள்ள வீட்டின் அருகில் உள்ள நிலத்திலிருந்து இன்று புகை வெளியாகியுள்ளது. வீட்டின் உரிமையாளர் காலை 11.00 மணியளவில் கழிவுப் பொருட்களைப் புதைப்பதற்காக குழி தோண்டிய போது, புகை வெளியாகியுள்ளது.
குறித்த வீட்டு நிலத்தின் தோண்டப்பட்ட குழி, சிறிது சிறிதாக பெரிதாகி அக்குழிக்குள் மூன்று இடங்களிலிருந்து கடந்த 3 மணித்தியாலங்களாக புகை வெளிவந்த வண்ணமுள்ளன.
இவ்வாறு நிலத்திலிருந்து திடீரென புகை வெளியாகியமையால் குறித்த பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அச்சமடைந்த பிரதேச மக்கள் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த பிரதேசத்தை சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
2ம் இணைப்பு
தோண்டப்பட்ட குழியிலிருந்து வெளியேறிய புகை, தீயாக சுவாலை விட்டு எரிவதால் அது எரிமலையின் சாயலை ஒத்திருப்பது போல தோன்றுவதால் அப்பிரதேச மக்கள் மிகுந்த பதற்றத்தோடு இருப்பதாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கனேடியப் பிரஜை ஒருவர் பரந்தன் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கனேடியப் பிரஜை ஒருவர் பரந்தன் பகுதியில் வைத்து இனந்தெரியாதவர்களால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச்சம்பவம் கடந்ந இரவு  9 மணியளவில் பரந்தன் குமரபுரம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
தாயகத்தின் கிளிநொச்சி குமரபுரம் பகுதியில் உள்ள தனது காணிகளைப் பார்வையிடுவதற்காக கனடாவில் இருந்து வந்த நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கனேடியப்பிரஜையான அந்தோனிப்பிள்ளை மகேந்திரராசா வயது 53 என்பவரே இவ்வாறு கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டவராவார்.
இதனால் பரந்தன் குமரபுரம் பகுதியில் பதற்றமான நிலைமை காணப்படுகின்றது. இந்தப்படுகொலை தொடர்பில் உடனடியாக காரணங்கள் எதுவும் தெரியவரவில்லையாயினும் பாதுகாப்பு தொடர்பில் இந்தக்கொலை பாரிய அச்சத்தைத் தோற்றுவித்துள்ளதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டுப்பிரஜைகளுக்குக் கூட இங்கு தமது நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலைமைகள் தோன்றியிருப்பதாகவும் இதனால் தாயகம் வரும் ஏனைய பிரஜைகள் மத்தியிலும் இவ்வாறான கொலைகள் பெரும் அச்சத்தைத் தோற்றுவிப்பதாகவும் அங்குள்ள கல்வியியலாளர்கள் இவரின் இந்தக் கொலை தொடர்பில் தெரிவிக்கும் போது குறிப்பிட்டனர்.
இந்தக் கொலை தொடர்பான விசாரணைகளைப்பொலிசார் ஆர்வம் காட்டுகின்ற போதிலும் இந்தக்கொலைக்கு பின்னர் இங்கு பெரும் பதற்றமான நிலைமைகள் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Friday, April 27, 2012

விடுவிக்கப்படும் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் பௌத்த விகாரைகள்: இராணுவத்தினரின் சதி?

இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்படும் பகுதிகளில் திட்டமிடப்பட்ட வகையில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் விகாரைகளைக் கொண்டு அப்பகுதிகளை பௌத்த சிங்கள உரிமை கோரும் திட்டத்தில் இராணுவத்தினர் செயற்படுகின்றனர் எனவும் புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அண்மையில் விடுவிக்கப்பட்ட அரியாலை கிழக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த பகுதியிலும் இவ்வாறு விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மண்ணினால் சீமெந்துக்கலவையுடன் இணைந்து பழைமையான விகாரகைகள் போல இவை அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள விகாரைகளை அகற்றக்கூடாது என இராணுவத்தினர் பொது மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அமைக்கப்பட்ட விகாரைகள் பின்னர் இரண்டு மூன்று வருடங்களில் தொன்மை மற்றும் புனித பிரதேசமாக மாற்றப்படலாம் என்றும் பொது மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்

8 பேர் மருத்துவமனை​யில் அனுமதிக்கப்​பட்டும் மெளனம் காக்கும் தமிழக அரசு!

உண்ணாநிலை 12 நாட்கள் கடந்து, 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் மவுனம் காக்கும் தமிழக அரசு! முகாம் தலைவர் விடுதலை கோரி அரசுக்கு விண்ணப்பம் கடந்து 12 நாட்களாக விடுதலை வேண்டு, 32 செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகளில் 17 பேர் நீண்ட உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்

Wednesday, April 25, 2012

மிலிந்த மொரகொட மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

கொழும்பு மாநகர சபை எதிர்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துகொள்வதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒன்று கூடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சர்வதேச அமைப்பு ஒன்றின் பதவிக்கு தாம் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவராக தம்மை நியமித்திருந்த ஜனாதிபதிக்கு நன்றியினை தெரிவிப்பதாகவும் மிலிந்த மொறகொட குறிப்பிட்டுள்ளார்.


அதேவேளை, புதிதாக நியமிக்கப்படும் எதிர்க்கட்சி தலைவர் விரும்புமிடத்து அவருக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை எந்நேரமும் வழங்குவதற்குத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தாலும் நகர மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் அவ்வாறே முன்னெடுக்கப்படும் என மிலிந்த மொரகொட வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் என்ற வகையில் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றும்போது மக்களுக்குத் தேவையான உதவி மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் உறுப்பினராக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை கௌரவமாகும் என குறிப்பிட்டுள்ள மிலிந்த மொரகொட, மாநகர சபைக்குள் வலுவான அணியொன்றை உருவாக்க கடந்த ஆறு மாதங்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக கூறியுள்ளார்.
இதன் பெறுபேறாக கொழும்பு மாநகர சபையின் மிகவும் முக்கிய செயற்குழுவான நிதி செயற்குழுவின் தீர்மானமொன்றை வெற்றிகொள்ளும் வாய்ப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமையிலான அணிக்கு கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மர்மப் பொருள் வெடித்ததில் சகோதரர் இருவர் உடல் சிதறிப் பலி: கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி பளை- முல்லையடி பகுதியில் மர்மப் பொருள் ஒன்றை அடித்து விளையாடிய சகோதரர்கள் இருவர் உடல் சிதறிப் பலியான சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நகரத்தை அண்டியுள்ள இந்தப் பகுதியில் வீட்டு வளவினுள் மர்மப் பொருள் ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்து வந்த மு. தமிழ்மாறன்(வயது4), மு. தனோஜன்(வயது2) ஆகிய சிறுவர்கள் இருவரும் அதனை கத்தியினால் வெட்டியும், அடித்தும் உள்ளனர், இதன் போது மிகப் பாரியளவு சத்தத்துடன் அது வெடித்துள்ளது.
இதில் சிறுவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே படுபயங்கரமாக முறையில் உயிரிழந்துள்ளார், மற்றய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பளை பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இதே வேளை, குறித்த சிறுவர்களின் தாய், ஒரு முன்பள்ளி ஆசிரியை எனவும், தந்தை ஒரு கூலித் தொழிலாளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இவர்கள் இருவருக்கும் இந்த இரு பிள்ளைகளே உள்ளனர் என்பதும் சோகமான விடயம்.

தம்புள்ள நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது

தம்புள்ள பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆரியரத்ன எதுகல விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்புள்ளயில் புண்ணிய பூமியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசம், விரிவாக்கல் திட்டத்தின் கீழ் மிக குறுகிய காலத்தில் மேம்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், தம்புள்ள பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பாக ஜனாதிபதி உள்ளிட்ட அரச தரப்பினரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பு போன்றே அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்றவகையில், நீண்டகாலமாக நாட்டில் நிலவிவரும் சம்பிரதாயங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய இனத்தவரையும் மதிக்கும் வகையிலேயே இவ்வாறு செயற்படுவது அவசியம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில், நாட்டு மக்களிடையே, பிரிவினைவாத குழுக்கள் அல்லது சர்வதேச அழுத்தம், சூழ்ச்சி அல்லது வேறு செயற்பாடுகள் ஊடாக குழப்பநிலையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அது தொடர்பாக சரியான தீர்மானங்களை எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இதில் கருத்து வெளியிட்ட அவர், நெருக்கடியை நிவர்த்திக்கும் பொருட்டு ஜனாதிபதியும் தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனிடையே, தம்புள்ளையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சியம் மகா நிகாயவின், ரன்கிரி தம்புள்ள விகாரையைச் சார்ந்த ஸ்ரீ சுமங்கல தேரர் கருத்து வெளியிடுகையில். அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் பொதுமக்களிடன் மன்னிப்பு கோரவேண்டும் என தெரிவித்தார்.
எனினும், தவறுகள் இருப்பின் மன்னிப்பு கோருவதற்கு தயாராக இருப்பதாகவும், தம்மால் அவ்வாறான பிழைகள் எதுவும் இழைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், தம்புள்ளையில் ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பில் முஸ்லிம் அமைப்புகளின் ஒன்றியம் தமது நிலைப்பாடுகளை வெளியிடுவதற்கு இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தம்புள்ளை சம்பவம் தொடர்பில் எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் அரசாங்கத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலக வேண்டும் என தெரிவித்தார்.
அத்துடன், பள்ளிவாசல் மீது தாக்கல் மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

இலங்கையின் சனத்தொகை 2 கோடிக்கும் அதிகம்: புதிய சனத்தொகை கணிப்பீடு

இலங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதேவேளை இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வேகம் குறைவடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிவதாக, சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இதற்கு முன்னர் நாடு முழுவதும் கடந்த 1981ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத்து எட்டு லட்சமாக காணப்பட்டது.
2001ஆம் ஆண்டு இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட போதும், யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதனை மேற்கொள்ள முடியாதிருந்தது.
எவ்வாறாயினும், மாவட்ட அரசாங்க அதிபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், அந்த காலப்பகுதியில் ஒருகோடியே 78 லட்சமாக சனத்தொகை காணப்பட்டது.
எனினும், தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில், இலங்கையின் சனத்தொகை இரண்டு கோடியே இரண்டு லட்சத்தை அண்மித்துள்ளதாக தெரியவந்துள்ளது

Monday, April 16, 2012

பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை சந்திக்க அனுமதி வேண்டும் - இலங்கை சென்ற இந்திய குழு கோரிக்கை

இலங்கையில் இந்தியா உதவியுடன் நடக்கும் சீரமைப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை பார்வையிடுவது முக்கியம் அல்ல. முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை சந்திப்பதே முக்கியம். அதற்காக வற்புறுத்தியுள்ளோம் என்றார் பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ்.
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது, இலட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போரின் போதும், போருக்கு பிறகும் ஈழத் தமிழர்களிடம் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடந்தன. இதில் அவர்களது வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
 
முகாம்களில் அடைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். போர் முடிந்ததும் ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான உரிமைகள் பெற்றுத் தருவோம் என்று கூறிய மத்திய காங்கிரஸ் அரசு தற்போது மவுனமாக உள்ளது.
 
இந்தியா உள்பட பல நாடுகளிடம் உதவி பெறும் இலங்கை அரசு அதை தமிழர் பகுதியில் சிங்கள மயமாக்கலுக்கே பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால், இலங்கையில் நடந்து வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய முடிவு செய்தது.
 
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 16 எம்.பி.க்கள் இந்த குழுவுக்காக தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து அ.தி. மு.க. சார்பில் ரபிபெர்னாட், தி.மு.க. சார்பில் இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்கம் தாகூர், கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
 
இந்த நிலையில் எம்.பி.க்கள் குழு பயணம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து இலங்கை செல்லும் குழுவில் இருந்து அ.தி. மு.க. விலகியது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ராஜபக்சேயுடன் எம்.பி.க்கள் விருந்து சாப்பிட மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருடன் எந்த விவாதத்துக்கும் ஏற்பாடு செய்யாததால் அ.தி.மு.க. குழுவில் இடம் பெறாது என்று கூறியிருந்தார்.
 
தற்போது தி.மு.க.வும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து விலகிவிட்டது. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் முதன்மையாக உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் விலகிவிட்ட நிலையில், அந்த குழுவில் 14 எம்.பி.க்களே உள்ளனர்.
 
இவர்கள் இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு இலங்கை செல்கிறார்கள். அவர்களிடம் நேற்று மத்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் பயணத் திட்டம் பற்றிய நிகழ்ச்சி நிரல்களை விளக்கி கூறினார்.

  • எம்.பி.க்கள் குழுவினர் ராஜபக்சே, பசில் ராஜபக்சே, பிரீஸ், ரணில் விக்கிரமசிங்கே பிள்ளையான் உள்பட சிலரை சந்தித்து பேசுவது பற்றி தெரிவிக்கப்பட்டது. 21-ந் தேதி ராஜபக்சேயுடன் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பற்றியும் கூட்டத்தில் கூறப்பட்டது. இதற்கு எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
 
தி.மு.க., அ.தி.மு.க. விலகிவிட்ட நிலையில், ராஜபக்சேயுடன் சிற்றுண்டி சாப்பிடும் விருந்து நிகழ்ச்சியை மாற்றவேண்டும் என்று குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூறினார்கள்.
 
ராஜபக்சேயுடன் 21-ந் தேதி காலை சாப்பிடுவதற்கு பதில் 20-ந் தேதி மாலை அவரை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபோல 18-ந் தேதி இலங்கை ரெயில்வே திட்டப்பணிகளை பார்வையிட பயணத் திட்டத்தில் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு மாணிக்கன் தோட்ட முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை சந்தித்துபேச அனுமதிக்க வேண்டும் என்றும் எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்

இலங்கை தமிழர்கள் மீது திமுகவுக்கு துளியளவும் அக்கறை இல்லை

நாடாளுமன்றத்தில் கட்சிகளின் எம்பிக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இலங்கை செல்லும் எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோ, திருமாவளவனோ இக் குழுவில் இடம் பெறமுடியவில்லை என்றும் பிரதமர் அலுவலகத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி கூறினார்.
திருமாவளவன் இந்தக் குழுவில் இடம் பெறுவதை இலங்கை அரசு விரும்பவில்லை. இதனால் தான் அவரை இதில் சேர்க்காமல் விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந் நிலையில் காரைக்காலில் நிருபர்களிடம் பேசிய நாராயணசாமி,

இலங்கைக்கு இந்திய எம்.பிக்கள் குழு செல்கிறது. இவர்கள் அங்கு செல்வதன் மூலம் அங்குள்ள தமிழர்கள் போருக்குப் பிறகு உள்ள நிலையை தெரிந்து கொள்ள முடியும். இந்தக் குழு அங்கு செல்வதால் இந்திய அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் அந்தந்த கட்சிகளின் எம்.பிக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இலங்கை செல்லும் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோ, திருமாவளவன் ஆகியோர் இலங்கை செல்லும் குழுவில் இடம் பெற முடியவில்லை என்றார் நாராயணசாமி.

இந் நிலையில் நாராயணசாமி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

டெல்லியில் இருந்து இலங்கைக்குச் செல்லும் நல்லெண்ண குழுவில் திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இளங்கோவனும் இந்த பயணம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் இலங்கை செல்லும் குழுவில் இருந்து திமுக இடம்பெறாது என்று அறிவித்தது வருத்தம் அளிக்கிறது. இந்த செயல் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் மீது அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

மத்திய அரசு நல்லெண்ண குழுவை இலங்கைக்கு அனுப்புவதன் மூலம் இந்தியா-இலங்கை நல்லுறவை நீடிப்பதோடு உலகில் பல்வேறு நாடுகளின் ஆதரவையும் இதன் மூலம் பெறுகிறது.

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மின்சாரம், வீட்டு வசதி, உணவு, உடை உள்ளிட்ட வாழ்வாதரத்திற்காக இந்தியா உதவி செய்வதன் மூலம் அண்டை நாடுகளின் உதவி இலங்கைக்கு கிடைக்கப்பெறாமல் தடுக்கும் ராஜதந்திர வழிமுறையாகும்

இலங்கை பிரச்சினையில் மூக்கை நுழைத்து அரசியல் ஆட்டம் ஆடும் ஜெயலலிதா - தேசப்பற்றுள்ள இயக்கம் குற்றச்சாட்டு

இலங்கை விவகாரத்தைக் களமாகப் பயன்படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆட்டம் ஆடுகின்றார் எனக் குற்றஞ்சாட்டியுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கைப் பயணம் பயனுள்ளதாக அமையவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை இந்திய உறவைப் புதுப்பிக்கும் முனைப்புடனேயே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கொழும்பு வந்துள்ளது. மாறாகத் தமிழர்கள் மீதுள்ள பாசம் காரணமாக அல்ல என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ பயண்மொன்றை மேற்கொண்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று இலங்கை வந்துள்ளது. இந்தக் குழுவில் தமது கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கமாட்டார்கள் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் அறிவித்துள்ளனர் இவர்களின் இந்த அறிவிப்புக் குறித்தும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் இலங்கைப் பயணம் தொடர்பிலும் கருத்து வெளியிடும் போதே தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகச் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை மீறியே எமக்கு எதிராக ஜெனிவாவில் செயற்பட்டது. இந்தியா இவ்வாறு செயற்படவேண்டும் என உறுதியாக அழுத்தம் கொடுத்தவர் ஜெயலலிதாதான். மத்திய அரசை எமக்கு எதிராகத் திருப்பிவிட்டதன் பின்னணியில் இவரே நின்று செயற்பட்டார். இவையெல்லாம் அரசியல் ஆட்டமாகும்.

இலங்கை வரும் இந்திய எம்.பிக்கள் குழுவில் தனது கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கினால் அது தனது கௌரவத்துக்கு மதிப்புக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தைக் கருத்திற்கொண்டே தனது கட்சி எம்.பிக்களைத் தமிழக முதல்வர் தடுத்துள்ளார்.

ஜெனிவா விவகாரத்தால் விரிசல் அடைந்தது எனக் கூறப்படும் இலங்கை இந்திய உறவைப் புதுப்பிக்கும் நோக்கிலேயே டில்லி எம்.பிக்கள் குழு இங்கு வருகின்றது. தமிழர்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி இந்த விஜயம் அமையவில்லை.
இலங்கையில் தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா உதவவேண்டும். அப்படி இல்லையேல் அழுத்தம் கொடுக்கவேண்டும். மாறாக அரசியல் ஆட்டம் ஆடக்கூடாது என்றார்

பேரினவாதிகளின் நீலிக் கண்ணீரை தமிழ் மக்கள் நன்கறிவர் - சரவணபவன் பா.உ.

ஆட்சிக்கு வரும் எந்தவொரு சிங்கள அரசியல்வாதியும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நல்லிணக்க சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதில்லை என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவான் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இதய சுத்தியுடன் இனப்பிரச்சினையைத் தீர்க்க ஆட்சியில் இருக்கும் போது முயல்வதே இல்லை. எனினும் அதன் பின்னர் பதவி போனதும் சுடலை ஞானம் பெற்றவர்கள் போல தமிழர் பிரச்சினை தொடர்பாக அக்கறை கொள்வது போல கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள்.

ஆனால் கடைசிவரையும் உருப்படியான எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளவே மாட்டார்கள். பேரினவாதிகளின் இத்தகைய கபட நாடகங்களை இனங்கண்டு, எமது அரசியல் தீர்வை நாமே தீர்மானிக்க வேண்டும்.
வட்டுக்கோட்டை கலைநகர் விளையாட்டுக்கழகத்தின் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழர் பக்க நியாயங்களை வெளிப்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டுள்ளார். இவற்றை ஒரு புறம் வரவேற்றாலும் இன்னொரு புறத்தில் இந்தக் கருத்தின் உண்மைத் தன்மை குறித்து கேள்வியும் எழுகின்றது. சந்திரிகா ஜனாதிபதியாக பதவி வகித்த போது இனப் பிரச்சினையைத் தீர்க்க இதய சுத்தியோடு முன்வரவில்லை. மாறாக தமிழர் தாயகத்தில் கொடும் போரையே ஏவிவிட்டார்.

அதற்குப் பின் ரணில் பிரதமர் ஆனவுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான நடவடிக்கைகளையும் குழப்புவதிலேயே சந்திரிகா குறியாக இருந்தார். இப்போது தமிழர்களின் பிரச்சினை பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

சந்திரிகா மட்டுமல்ல, எந்தவொரு பேரினவாத அரசியல்வாதியும் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க மனதார விரும்புவதில்லை. இதனை தமிழ் மக்களும் நன்குணர்ந்துள்ளனர்.

இப்போது களநிலைமை நமக்கு சாதகமாக மாறியுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் சர்வதேசத்தின் ஆதரவு தமிழருக்கு இருப்பதை வெளிக்காட்டுகிறது. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 24 நாடுகளையும் தன் பக்கம் இழுக்க இலங்கை அரசு படாதபாடு படுகிறது. ஏனெனில் இலங்கைக்கு எதிரான இன்னொரு தீர்மானம் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகின்றன.

இதன் போது தனக்கு எதிரான முடிவு வரக் கூடாது என்பதற்காகவே இந்த முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது. அந்த முயற்சியின் ஒரு நடவடிக்கையாகவே இந்தியக்குழுவை இலங்கை வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவை இதன் மூலம் தன் பக்கம் இழுக்கலாம் என அரசு நம்புகின்றது.

இத்தகைய வீணான முயற்சிகளை விடுத்து தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்க அரசு முன்வந்தால் சர்வதேசத்திற்கு பயப்படும் நிலைமை மாறிவிடும். என்றார்

தமிழர்கள் பிரச்சினை, பெருபான்மை சிங்கள மக்களுக்கு தெரியாது! தீர்வினை வழங்க அவர்கள் தடையில்லை: சந்திரிக்கா தெரிவிப்பு

தமிழர்களுக்கு தீர்வினை வழங்குவது தொடர்பில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சிங்கள மக்கள் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மிகவும் பிழையானவை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதுவரையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் பெரும்பான்மையான சிஙகள மக்களுக்கு தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் லாப நோக்கங்களுக்காக இனப்பிரச்சினையை அரசியல்வாதிகள் தூண்டி விடுவதாகவும், தமிழ் மக்கள் எதிர்நோக்கி பிரச்சினைகளை தொடர்ச்சியாக சிங்கள மக்களிடமிருந்து மூடிமறைத்து வந்ததாகக் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் இன்மையே பிரச்சினைகளுக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும், நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டுமென கூட்டமொன்றில் தாம் குறிப்பிட்டதாகவும், அவ்வாறு குறிப்பிட்டால் நாம் வாக்குகளை இழக்க நேரிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தம்மிடம் கூறியதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென அரசியல் மேடைகளை தெரிவித்த தமக்கு தேர்தல்களில் பாரியளவு வெற்றி கிட்டியதாகவும், சிங்கள மக்கள் அதிகாரப் பகிர்வினை எதிர்க்கவில்லை என்பதற்கு இதுவே சான்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அரசாங்கம் வடக்கு மக்களுக்கு போதியளவு சேவைகளை ஆற்றவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கியிருப்பதாகவும், ஏன் அவர்கள் இன்னமும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இராணுவத்தினரின் பிரசன்னம் அவசியம் என்பதனை ஒப்புக் கொள்வதாகவும், யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பாரியளவில் படையினரை குவிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் அமைதியானவர்கள், அனைத்து தமிழர்களையும் பயங்கரவாதிகளாக கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மற்றொரு கண்டம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கை மீது அனைத்துலக கவனம் திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், உலக நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை பற்றிய மீளாய்வு இடம்பெறவுள்ளது. இந்த மீளாய்வில் இலங்கை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
இந்தநிலையில், இலங்கை தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க ஐ.நாவின் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளுக்கு ஏப்ரல் 23ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு இலங்கைக்கு எதிர்வரும் ஜுலை 23ஆம் திகதி வரை காலஅவகாசம் அளிக்கப்படும். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நவம்பர் திகதி இலங்கை தொடர்பான மீளாய்வு விவாதம் நடத்தப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக அனைத்துலக பணிகள் தொடர்பான மீளாய்வை இலங்கை மேற்கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜுன் மற்றும் செப்டோம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில், முன்னேற்றங்கள் தொடர்பாக தாம் அறியப்படுத்தவுள்ளதாக இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்

Thursday, April 12, 2012

கடந்த தேர்தல்களின் போது ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எட்டு தடவைகள் தம்மிடம் கோரியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.தொலைபேசி ஊடாக எட்டு தடவைகள் ஜனாதிபதி மஹிந்த ஆதரவு கோரியிருந்தார்.

கடந்த தேர்தல்களின் போது ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எட்டு தடவைகள் தம்மிடம் கோரியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைபேசி ஊடாக எட்டு தடவைகள் ஜனாதிபதி மஹிந்த ஆதரவு கோரியிருந்தார்.
எனினும் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என நான் தீர்மானித்திருந்தேன்.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த எதிர்ப்பை வெளியிட்டார்.
இதன் காரணமாகவே ஆளும் கட்சிக்கு நான் ஆதரவளிக்கவில்லை என சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஊடகங்களுக்கு அளித்த விசேட நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

எஞ்சியுள்ள 700 புலி உறுப்பினர்களை விடுவிக்க ஒரு வருட காலம் செல்லும்!- புனர்வாழ்வு ஆணையாளர்

முகாம்களில் எஞ்சியுள்ள 700 முன்னாள் புலி உறுப்பினர்களை விடுதலையை இன்னும் ஒரு வருடம் வரை செல்லும். விடுதலையடைந்தவர்கள் சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக வாழ்கின்றனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட பெரும்பாலான புலி உறுப்பினர்களுக்கு முகாம்களில் புனர்வாழ்வு அளித்தோம். அத்தோடு தொழில்சார் பயிற்சிகளை வழங்கி தத்தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளத் தேவையான ஒழுங்குகளை செய்து கொடுத்துள்ளோம்.
பெரும்பாலானோர் விடுதலை செய்யப்பட்டு தற்போது எழுநூறு பேர் மாத்திரமே புனர்வாழ்வு பெற்று வருகின்றனர்.
இவர்களை விடுதலை செய்ய நீண்ட நாட்கள் எடுக்கும். ஏனெனில் மேற்படி 700 பேருக்கும் விஷேட வகையில் புனர்வாழ்வுகள் அளிக்கப்பட வேண்டியுள்ளது.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு விஷேட விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் வாரத்தில் வவுனியாவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார்

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமியின் காணொளிகள்

இந்தோனேஷியாவில் இன்று தொடர்ந்து மூன்று தடவை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி அலைத் தாக்கியுள்ளது.
இந்தோனேஷியாவின் ஆச்சே பிராந்தியத்தின் தலைநகரான பண்டாஆச்சேவில் இருந்து 495 கிலோ மீட்டர் தொலைவில், கடலுக்குள் 33 கிலோ மீட்டரில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கியுள்ளது. சுனாமியால் ஏற்பட்ட சேத நிலவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்ல.

என்னை கடத்தியவர்கள் சிறிலங்கா அரச பாதுகாப்புச் சேவையை சேர்ந்தவர்களே: குணரட்ணம்

தன்னைக் கடத்திச் சென்ற நபர்கள் நன்கு பயிற்சி பெற்ற பாதுகாப்பு துறையினரே என்றும், அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என்றும் நினைத்தேன் என பிறேம்குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்ட பிறேம்குமார் குணரட்ணம் பிபிசிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நான் தங்கியிருந்த அறைக்குள் திடீரெனப் புகுந்த சுமார் 15 வரையிலான கடத்தல்காரர்கள், என்னை கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றனர்.
அவர்கள் நிச்சயமாக அதிகாரபூர்வமற்ற வகையில் செயற்படுவதற்கு பயிற்றப்பட்ட சிறிலங்கா பாதுகாப்புத்துறையினரே.
கடத்திய பின் என்னை இராணுவ முகாம்களிலோ, காவல் நிலையங்களிலோ தடுத்து வைத்திருக்கவில்லை. எனவே அவர்கள் யார் என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை.
ஆனால் அவர்கள் நடந்து கொண்ட கடுமையான முறைகளில் இருந்து, அரசியல் அங்கீகாரம் கொண்டவர்களின் ஆசீர்வாதத்துடன் செயற்படும் சிறிலங்கா அரச பாதுகாப்புச் சேவைகளைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை உறுதி செய்ய முடிகிறது.
என்னைக் கடத்தியவர்கள் உடனடியாக சித்திரவதை செய்தனர். ஆனால் பின்னர் தமது உத்தியை மாற்றிக் கொண்டனர்.
இந்தக் கடத்தலை என் மீதான தெளிவானதொரு கொலை மிரட்டலாகவே நான் பார்க்கிறேன்.
இது அடிப்படை உரிமைகளை மீறும் செயல். அவர்கள் என்னைக் கொல்லப் போகிறார்கள் என் நினைத்தேன்.
எனது அரசியல் தொடர்பாக, கட்சி தொடர்பாக, அதன் நிகழ்ச்சிநிரல் தொடர்பாக, உதவியாளர்கள் தொடர்பாக பல கேள்விகளை அவ்கள் எழுப்பினர்.
எனது போலியான அடையாளங்கள் பற்றி அவர்கள் எதுவும் கேட்கவில்லை. அதையெல்லாம் அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் குணரட்ணத்தை சிறிலங்கா அரசபடைகள் கடத்தவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது

Wednesday, April 11, 2012

கடத்தல் விவகாரம், சிறீலங்கா மீது சேறுபூசும் நடவடிக்கை: தூதரகங்களுக்கு அரசாங்கம் விளக்கம்

குடிவரவு சட்டத்தை மீறியமைக்காக குமார் குணரட்ணம் நாடுகடத்தப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
குமார் குணரட்ணம் மற்றும் திமுது ஆட்டிகல கடத்தப்பட்டதாக வெளியான செய்திகள் தொடர்பாக கொழும்பிலுள்ள அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் ஐ.நா. மற்றும் ஐ.நா. முகவர் நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திலேயே வெளிவிவகார அமைச்சு இதைத் தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குமார் குணரட்ணம் தனது பெயரை 3 தடவை மாற்றியுள்ளதாக தென்படுகிறது. முதலாவது பெயரான வன்னிநாயக்க முதியான்ஸலாகே தாஸ்கொன் அவரின் திருமணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்டில் அவர்பெற்ற கடவுச்சீட்டில் ரட்நாயக்க முதியான்ஸலாகே தயாலால் என்ற பெயர் உள்ளது.எனினும் அவர் 2011 செப்டெம்பர் 4 ஆம் திகதி இலங்கைக்கு வரும்போது சமர்ப்பித்த அவுஸ்திரேலிய கடவுச்சீட்டில் நோயல் முதலிகே எனும் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அவரின் கடந்தகால வரலாறு தொடர்பான விசயங்கள் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு அனுப்பப்படும். இத்தகவல்கள் குணரட்ணத்தையும் அவரின் குடும்ப அங்கத்தவர்களையும் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியபோது வெளிவந்தவை.
இடம்பெற்றதாக கூறப்படும் இக்கடத்தல் குறித்து ஊடகங்களில் வெளிவந்த தகவல்களானவை அவற்றின் நம்பகத்தன்மை குறித்து கருத்திற் கொள்ளத்தக்க சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக குணரட்னத்தின் கடத்தல் 2012 ஏப்ரல் 7 ஆம் திகதி காலை 4.00 மணிக்கு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாலை 4.10 மணிக்கே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இவற்றுக்கிடையில் 12 மணித்தியால இடைவெளி உள்ளது.
திமுது ஆட்டிகலவின் கடத்தல் 2012 ஏப்ரல் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக மறுநாளான 7 ஆம் திகதி பிற்பகல் 3.35 மணிக்கே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இவற்றுக்கிடையிலான இடைவெளி ஏறத்தாழ ஒரு முழுநாளாகும். உண்மையான கடத்தல்கள் குறித்து மேலும் விரைவாக முறைப்பாடு செய்யப்படும் என்பது வெளிப்படையானதாகும்.
குணரட்ணம் குறித்த கதையில் உறுதிப்படுத்தல்கள் இல்லை. அது நம்பத்தன்மையிலிருந்து கணிசமானளவு விலகியிருக்கும் பல பலவீனங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, அவர் சார்ந்த அரசியல் குழுவினால் திட்டவட்டமான நபருக்கு அக்கறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ள போதிலும் அவர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சமயத்தில் பகுதியளவில் கட்டப்பட்ட வீடொன்றின் மேல்தளத்திலுள்ள அறையொன்றில் தங்கியிருந்தார். அவ்வீடு நீண்டகாலமாக ஆட்கள் வசிக்காததாகும்.
குணரட்ணத்தின் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக பகிரங்கமாக பல கருத்துக்களை வெளியிட்ட அவரின் மனைவி, 2006 நவம்பர் 7 ஆம் திகதிக்குப் பின்னர் தனது கணவர் தன்னுடன் வசிக்கவில்லை எனவும் அவர் எங்கே உள்ளார் என்பது தனக்குத் தெரியாது எனவும் திட்டவட்டமாக பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.
குணரட்ணம் 5 மாதங்களுக்கு மேலாக, இந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளார் என்பது தெளிவாகிறது. அவரின் விஸா 5 மாதங்களுக்கு முன் காலாவதியாகியுள்ளது.
இந்த அரசாங்கமானது ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு பதிலளிப்பதாகும் என்பதை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட விரும்புகிறது. கொந்தளிப்புத் தன்மையான குற்றச்சாட்டுகளானவை முறையாக உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் மதிப்பிடப்பட்ட உண்மைத் தகவல்களின் அடிப்படையில் அமைவது முக்கியமானதாகும்.
எந்தவொரு நபரும்தான் தனிப்பட்ட காரணங்களுக்காக சார்ந்த சமூகத்திலிருந்து தன்னை வாபஸ்பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தால், அல்லது வேண்டுமென்றே அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்த முற்பட்டால், அங்கே ஒரு கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தீர்மானித்து அரசாங்கத்தை நோங்கி விரல் நீட்டுவது அநீதியானதாகும். பல தடவை இவ்வாறு இடம்பெற்றுள்ளன. இது சர்வதேச மன்றங்களில் இலங்கையை இலக்குவைக்கும் நோக்குடையதாகும்.
ஆதாரங்கள் இல்லாத நிலையில் அவை உணர்வுகள், ஊகங்கள், மற்றும் வசைமாரிகளால் ஈடுசெய்யப்பட்டுள்ளன. இத்தகைய தீயநோக்கம் கொண்ட பொறுப்பற்ற பிரசாரங்களுக்கான ஆட்சிப் பிரதிபலிப்புகளுக்கான அளவீடுகளானவை பாரபட்சமின்மையும் அடிப்படை நியாயத்தன்மையுமாக இருக்க வேண்டுமென அரசாங்கம் கோருகிறது என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரந்தன் – முல்லை வீதியில் வேகமாக அகற்றப்படும் படைமுகாம்கள்..

வன்னிப் பெருநிலப்பரப்பில், பரந்தன் சந்தியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச்செல்லும் பிரதான வீதியில் அமைந்திருந்த பிரதான இராணுவ முகாம்கள் நேற்று முன்தினம் தொடக்கம் அகற்றப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.
முரசுமோட்டைக்கு அண்மையாக அமைந்திருந்த முகாம், தருமபுரம் சந்தியில் அமையப்பெற்றிருந்த முகாம், சுண்டிக்குளம் சந்திக்கு அருகாமையிலுருந்த முகாம், விஸ்வமடு ரெட்பானா நகர் முகாம், ஆகிய முகாம்களே அகற்றப்பட்டிருக்கின்றன.
படையினரின் இத்திடீர் மாற்றம் குறித்து மக்கள் அச்சப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்தன.
அமெரிக்க மற்றும், ஐ.நா பிரதிநிதிகள் விஜயம் காரணமாகவும், படைமுகாம்கள் வன்னியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதாக மேற்குலகிற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் காட்டிக்கொள்வதற்காகவும் இந்நாடகம் நடாத்தப்படலாம் எனவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்

Share யாழில் மனித உரிமையாளர்களின் செயற்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் பொலிசார்

யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தமது கடமையைச் செய்வதற்கு யாழ். பொலிஸார் இடையூறு விளைவிப்பதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று காலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

"யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படும் சந்தேகநபர்களை மாதத்தில் ஒரு தடவை சென்று பார்வையிட்டு யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணை செய்து வருவது வழக்கம்.

அவர்களின் மனித உரிமை சார்ந்த நலன்கள் பேணப்படுகிறதா என விசாரிப்பது எமது கடமை. எமது கடமையைச் செய்யவிடாது யாழ்.பொலிஸ் அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பொலிஸார் மீது விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது  என யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் குறிப்பிட்டார்

தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா!

தமிழீழம் என்கிற தனிநாடு வேண்டுமா? வேண்டாமா? என்கிற வாக்கெடுப்பை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சொந்த இடமாக கொண்டிருக்கக் கூடிய தமிழர்கள் மத்தியில் நடத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது என தெரிய வருகின்றது.
உள்நாட்டில் மட்டும் அன்றி வெளிநாடுகளில் வாழ்பவர்களும் இவ்வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் அமையப் பெற்று இருக்கும் என்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு இதில் காத்திரமான பங்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு தொமோர் ஆகியவற்றை தனிநாடாக பிரகடனப்படுத்துகின்றமைக்கு கடந்த வருடங்களில் ஐக்கிய நாடுகள் சபையால் வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டன.
அவை போலவே தமிழீழம் தொடர்பான வாக்கெடுப்பும் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா எதிரான முடிவை சாதாரணமாக எடுத்ததாக நான் கருதவில்லை! ஏதோ தீவிரமாக நடந்திருக்கிறது! சந்திரிகா செவ்வி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா மறுத்ததன் பின்னணியில், இருநாடுகளுக்கும் இடையில் ஏதாவது தீவிரமாக நடந்திருக்க வேண்டும் என்றும்,   இந்தியா இந்த முடிவை சாதாரணமாக எடுத்ததாக நான் கருதவில்லை எனவும் இலங்கையின் முன்னாள்  ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்
புதுடில்லியில் சிஎன்என் - ஐபிஎன் தொலைக்காட்சிக்கு வழங்கிய தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தச் செவ்வியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது-
கேள்வி- ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது பற்றிய உங்களின் கருத்து...
சந்திரிகா- இது இலங்கைக்கு நல்லதல்ல. தனிப்பட்ட ரீதியாக, இந்த நிலை ஏற்பட்டது எனக்கு மிகவும் வருத்தம். ஆனால், இந்த நிலை ஏற்பட ஏன் விட்டிருக்க வேண்டும் என்பது குழப்பமாகவுள்ளது.
ஏனென்றால், 2009 ல், கடைசியாக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது இந்தியா எங்களுக்கு முழுமையாக ஆதரவளித்தது. எங்களுக்காக ஆதரவு தேடியது. அதனால் நாங்கள் வெற்றி பெற்றோம். தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
எங்களுக்கு எதிராக வாக்களித்ததற்கு, இந்தியாவுக்கு இடையில் ஏதாவது நடந்திருக்க வேண்டும். இந்தியா இந்த முடிவை சாதாரணமாக எடுத்ததாக நான் கருதவில்லை.
கேள்வி– மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உலகத்தை திருப்தி கொள்ள வைக்கும் அளவுக்கு இலங்கை அரசாங்கம் போதுமான அளவில் செய்யவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள், உண்மையில் அங்கே களநிலைமைகள் என்ன?
சந்திரிகா– நல்லிணக்கத்துக்கு, பௌதிக மீள்கட்டுமானத்துக்கு இன்னும் அதிகமாகவே செய்ய முடியும். போர் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளாகி விட்டன.
கேள்வி- இந்தியாவின் வாக்கு இந்திய- இலங்கை உறவுகளை வெட்டிப் போட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இந்த விடயத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
சந்திரிகா- இந்தியா கடந்த காலத்தில் எந்தவொரு வழியிலும் இலங்கையின் கொள்கைகள், திட்டங்களில் அல்லது அரசாங்கத்தில் தடைகளை ஏற்படுத்தியதில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு அது தெரியும்.
தமிழ்மக்களின் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண இந்தியா கேட்கிறது என்பது பகிரங்கமான விடயம். போரின் முடிவு தானாகவே அமைதியைக் கொண்டு வந்து விடாது என்ற கருத்தை நான் எப்போதும் கொண்டுள்ளேன்.
தீவிரவாதத்தில் இருந்து விடுபட அதுதான் முதலாவது அடி என்பது வெளிப்படை. ஆனால் அதன் பின்னர் நிறையவே மீளக்கட்டமைக்க வேண்டும்.
கேள்வி- விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், நூறாயிரக்கணக்கான தமிழர்கள், பெரும்பாலும் இலங்கை இராணுவத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் சித்திரவதைகள் பற்றி கூறுகிறார்கள். இது வடக்கு,கிழக்கு மக்கள் நல்லிணக்க நகர்வுகளை நோக்கிச் செல்வது சாத்தியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
சந்திரிகா-  நிச்சயமாக, அரசாங்கம் தலைமை தாங்கினால், அது சாத்தியம். தென்னாபிரிக்காவில் என்ன நடந்தது என்று பாருங்கள்.
கேள்வி-  இந்தியாவின் பங்கு எப்படியிருக்க வேண்டும்?
சந்திரிகா- இந்தியாவின் பங்கு எமக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். எமது அரசாங்கத்தை இந்த வழியில் முன்நோக்கிச் செல்வதற்கு ஊக்குவிக்கின்ற வகையில் இருக்க வேண்டும். இந்தியா அதை நன்றாகவே செய்கிறது. ஆனால், சொல்வதை நன்றாக கேட்க வேண்டும்.

tamilfast