Tuesday, April 10, 2012

ஆஸி. சத்தியசாயி அமைப்பின் அனுசரணையில் கிளி. இராமநாதபுரம் நாவல்நகரில் சனசமுகநிலையம்

பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நாவல் நகரில் அவுஸ்திரேலிய புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளில் ஒன்றான சத்தியசாயி அமைப்பின் அனுசரணையுடன் நிரந்தர கட்டிடத்துடன் கூடிய சனசமுகநிலையம் அமைப்பதற்கான முன்னாயத்தமாக தற்காலிக நிலையம் ஒன்று பா.உறுப்பினர் சி.சிறீதரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கிராம அலுவலர் சனசமுநிலைய நிர்வாகிகள் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள் கரைச்சி கண்டாவளைப் பகுதிகளுக்கான சனசமூக அபிவிருத்தி  உத்தியோகத்தர் கரைச்சி பிரதேசசபை உபதவிசாளர் நகுலேஸ்வரன் உறுப்பினர் செல்லத்துரை  கிராம மக்கள் என கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் கலந்துகெண்டு சனசமுக உத்தியோகத்தர் ஜெயமாலினி கருத்துரைக்கையில்,
இன்று எமது கிராமங்களில் கூட்டாக இயங்குகின்ற  கலாச்சாரம் அருகி வருகின்றது. ஆனபோதிலும் சமூக நேசிப்பு மிக்க மனிதர்களால் விடாமுயற்சிகள் சில வேளைகளில்  சமூக பயனுள்ளதாக மாறி வருகின்றன. அவ்வாறு  பயனுள்ளதாக  உருவாக்கம்  பெற்றதுதான்  இச் சனசமூக நிலையம்.
சனசமூக நிலையங்களைக்  கிராமங்களில் நடைமுறைப்படுத்துவது மிகவும் சிக்கலான காரியமாகவே  இருக்கின்றது.  பல்வேறு சனசமூக நிலையங்கள் கிராமங்களில் தோன்றுவதும் மறைவதுமாகவே இருக்கின்றன. 
இந்த நிலை  வெகுசன வாசிப்புத்திறனை,  உலக அறிவை மந்தப்படுத்துவதற்கான  காரியமாகவே  இருந்து வருகின்றமை  சோதனைக்குரிய  விடயம்  இதற்கு  கிராமிய  சமூகம்  ஒன்று  அதனுடைய அறியாமையிலிருந்து  விடுபட  வேண்டுமாக இருந்தால்  வாசிக்கும்  பண்பாட்டை  வளரச் செய்வதே  நன்று.
ஒரு கால்மாக்ஸின் கருத்து உலகளாவிய கவர்ச்சிகர எண்ணங்களாக    எடுத்தாளப்படுகின்றதோ   அது போல  சில தனி  மனிதர்களது சிந்தனைகள்  சமூக  பல் பரிணாம  வளர்ச்சிக்கு  அடிப்படையாக  அமைந்து விடுகின்றன.
எனவே  பின் தங்கிய   கிராமங்களில் வாழ்கின்ற  சில  இளைஞர்களின்  சிந்தனைகளை மட்டுமன்றி செயற்பாடுகளையும்  கொண்டு வந்து  முழு  சமூகத்திற்கும்  முன்மாதிரியாக  செயற்பட வேண்டும் என்றும்  ஜெயமாலினி கேட்டுக்கொண்டார்

No comments:

Post a Comment

tamilfast