Tuesday, April 10, 2012

திமுது ஆட்டிக்கலவும் இன்று விடுவிக்கப்பட்டார்!- கடத்தல்காரர்கள் பற்றி அவர் வெளியிட்ட தகவல்கள்

முற்போக்கு சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்ணத்துடன் கடத்தப்பட்ட, அந்தக் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவி திமுது ஆட்டிக்கலவும் இன்று காலை கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள மடவெல பகுதியில் வைத்து கடத்தல்காரர்கள் இவரை விடுவித்துள்ளனர்.
வாகனம் ஒன்றில் கொண்டு வரப்பட்டு இறக்கி விட்ட கடத்தல்காரர்கள் முச்சக்கர வண்டியில் செல்வதற்கான பணத்தையும் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து திமுது ஆட்டிக்கல கட்சிப் பணியகத்துக்கு காலை 10 மணியளவில் சென்றடைந்தார்.
விடுவிக்கப்பட்ட பின்னர் மடவெலவில் உள்ள முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுது ஆட்டிகல என்ன நடந்தது என்று விபரித்தார்.
"வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆறு பேர் எனது கண்களைக் கட்டி கடத்திச் சென்றனர். அவர்கள் என்னை ஒரு அறைக்குள் அடைத்து வைத்திருந்தனர்.
அதிகாலை 5 மணியளவில் கடத்தல்காரர்கள் குணரட்ணத்தையும் என்னையும் விசாரணைக்கு உட்படுத்தினர்.
நீங்கள் இல்லையென்றால், தலைவர் இல்லாமல் உங்களின் கட்சியின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு விடுமா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அடுத்த இரவு நான் வேறொரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இன்றுகாலை வரை அங்கேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.
குமார் நாடு கடத்தப்பட்டு விட்டதாக அவர்கள் என்னிடம் கூறினர். பின்னர் என்னையும் நன்றாகவே விடுவித்தனர்.
தம்மை அடையாளம் காண முனையவோ, வாகன இலக்கத்தைக் குறிப்பெடுக்கவோ கூடாது என்று கடத்தல்காரர்கள் என்னிடம் கூறினர்.
தாங்கள் விலகிச் செல்லும் வரை என்னை திரும்பிப் பார்க்கக் கூடாது என்றும் கூறியிருந்தனர்.
அந்த வாகனத்தின் இலக்கம் 2801 என்பது மட்டும் தான் எனக்கு நினைவில் உள்ளது.
இதில் அரசாங்கம் சம்பந்தப்படவில்லை என்றும் கடத்தல்காரர்கள் என்னிடம் கூறியிருந்தனர்.
கடத்தல்காரர்கள் தமக்கிடையே உரையாடிக் கொள்ளும்போது 'சேர்' என்ற சொல்லையே பயன்படுத்திக் கொண்டனர்.
காவல்துறையினர் மத்தியில் தான் இவ்வாறு பேசிக் கொள்ளும் வழக்கம் உள்ளது" என்றும் திமுது ஆட்டிக்கல மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

tamilfast